பழம்பெரும் நடிகர் அலைன் டெலோன் காலமானார்! ஜனாதிபதி இரங்கல்

0
195

பிரான்ஸை சேர்ந்த பழம்பெரும் நடிகரான அலைன் டெலோன் Alain Delon தனது 88 வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பிரஞ்சு நியூ வேவ் சினிமாட்டிக் இயக்கத்தின் முக்கிய முகங்களும் ஒருவராக திகழ்ந்தவர் அலைன் டெலோன்.

மேலும், ‘பர்பில் நூன்’ 1960, ‘லே சாமுராய்’ 1967 உள்ளிட்ட படங்கள் மூலம் அலைன் டெலோன் உலகப் புகழ்பெற்றார். கேன்சர் நோயுடனும் போராடி வந்த அவர் நேற்று முன் தினம் (18-08-2024) அதிகாலை தனது வீட்டில் மனைவி மற்றும் 3 குழந்தைகள் சூழ அமைதியான முறையில் உயிரிழந்துள்ளார். 

அவரின் மறைவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார். சிறப்பு வாய்ந்த பாத்திரங்களை ஏற்று நடித்து உலகைக் கனவு காண வைத்தவர் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உலகம் முழுவதிலும் உள்ள இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர.