தலைநகர் திரிபோலியில் சிரேஷ்ட ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டதையடுத்து, லிபியாவின் மத்திய வங்கி அதன் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன் தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் முசாப் மசலேம் (Musab Msallem) கடத்தப்பட்டதை வங்கி வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை மசலேம் ஒரு அடையாளம் தெரியாத தரப்பினரால் அவரது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும், மற்ற ஊழியர்களை கடத்துவதாக அச்சுறுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மசலேம் விடுவிக்கப்படும் வரை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படாது என்று மத்திய வங்கி கூறுகிறது. சுதந்திரமான ஆனால் லிபிய அரசுக்கு சொந்தமான மத்திய வங்கி, லிபிய எண்ணெய் வருவாயில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட வைப்பிடம் ஆகும்.
ஏஎப்பி செய்தி நிறுவனத்தின் தகவல்படி, ஆயுதமேந்திய நபர்களால் மத்திய வங்கி முற்றுகைக்கு உள்ளான ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த கடத்தல் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.