ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகளுக்காக 200,000 முதல் 225,000 வரையிலான அரச ஊழியர்கள் பணிக்கமர்த்தப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 13,000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறும் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடி அல்லது மதச் சின்னங்களைப் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தும் கட்சிகள் மீது சடட் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.