வடகொரியா 5 ஆண்டுகளுக்கு பின் அதன் எல்லைகளை மீளத் திறப்பதற்கு தீர்மானம்

0
81

வடகொரியா ஐந்து வருடங்களுக்குப் பின்னர் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிக்காக அதன் எல்லைகளைத் திறப்பதற்கு  தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் அதன் எல்லைகளைத் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று பரவல் காரணமாக சுமார் ஐந்து வருடங்களாக வடகொரியா சுற்றுலாப்பயணிகளுக்காகத் தமது எல்லைகளை மூடியிருந்தது.

இந்தநிலையில் தென்கொரியா சுற்றுலாப் பயணிகளைத் தவிர ஏனைய நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு வடகொரியாவிற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது