தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள தவறான கடிதம்: பிரதமர் ஊடகப் பிரிவு விளக்கம்

0
55

பிரதமருக்கு ஆசி வழங்கும் அன்னதான நிகழ்வு குறித்து தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு என்ற தலைப்பில் 2024.08.09 அன்றும் அதற்கு கிட்டிய நாட்களிலும் ஊடகங்களில் வெளியிடப்பட்ட மற்றும் பரப்பப்பட்ட செய்தியுடன் தொடர்புடையது.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு ஆசி வேண்டி, தாய்நாட்டின் ஐக்கியம், ஆள்புள ஒருமைப்பாடு, இறைமை மற்றும் பாதுகாப்புக்காக கதிர்காம் கிரிவிஹாரை புண்ணிய பூமியில் ஆண்டுதோறும் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் நடைபெறும் மகா சத்யக்ரியா மற்றும் அதிஷ்டான பூஜை இம்முறை, 30ஆவது தடவையாக நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வு இக்காலப்பகுதியில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும். மூன்று தசாப்தங்களாக இடம்பெறும் இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், தேசிய அமைப்புகள், கல்வியாளர்கள், தேசிய இயக்கங்கள் மற்றும் மத அமைப்புகள் இதில் அழைக்கப்பட்டும் அழைக்கப்படாமலும் பங்கேற்கின்றன.

பிரதமருக்கோ, அரசியல் நிறுவனங்களுக்கோ, எந்த ஒரு தனிநபருக்கோ அல்லாது முழு தேசத்திற்கும் ஆசி வேண்டி இடம்பெறும் இந்த அதிஷ்டான பூஜை மற்றும் சத்தியாக்கிரியா நிகழ்வு எந்த குறுகிய நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படவில்லை, பயன்படுத்தப்படாது என்பதோடு, பலர் இதில் தன்னார்வமாக பங்குபற்றுகிறார்கள்.

பிரிவினைவாத பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு வெற்றிபெறும் வரை மாத்திரமல்ல அனைத்து நாட்டு மக்களின் முன்னேற்றத்திக்காகவும் படைவீரர்களுக்கு ஆசிவேண்டியும் இது இடம்பெறுகிறது.

பஃபரல் அமைப்பு தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள தவறான கடிதத்தை குறிப்பிட்டு ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியின்படி, மேற்படி அதிர்ஷ்டான பூஜைக்கும், சத்தியக்கிரியா நிகழ்விற்கும் பிரதமர் அலுவலகம் மூலமாகவோ அல்லது பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிஅமைச்சின் மூலமாகவோ எந்தவொரு மாவட்டச் செயலாளருக்கும், பிரதேச செயலாளருக்கும் அல்லது அரசாங்க உத்தியோகத்தர் எவருக்கும் அறிவிக்கப்படவோ அல்லது அழைக்கப்படவோ இல்லை. மேற்படி தவறான செய்தியை சரி செய்வது பாராட்டுக்குரியதாகும்.