2024ஆம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த போட்டிகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் சமூக வலைத்தளங்களை ஆட்கொள்கின்றன.
அந்தவகையில், ஹுவாங்கின் ஒலிம்பிக் அணி வீரர் லியு யுச்சென், முழங்காலில் மண்டியிட்டு மலர் கொத்து கொடுத்து தன்னை திருமணம் செய்து கொள்வதற்கான வேண்டுகோளை விடுத்தார். உணர்ச்சிவசப்பட்ட ஹுவாங் அதை ஏற்றுக் கொண்டார். லியு தனது விரலில் மோதிரத்தை வைத்தபோது கூட்டம் ஆரவாரத்தில் கிளந்து எழுந்தது.
குறித்த காணொளியும் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது. பாரீசில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் சீன வீராங்கணை ஹுவாங் யா கியோங் தங்கம் வென்ற நிலையில் அவரது சக கூட்டாளியிடம் இருந்து காதல் வேண்டுகோளையும் பெற்று உள்ளார்.
மைதானத்தில் மலர்ந்த காதல்
மைதானத்தில் அவர்கள் வெற்றி பெற்ற பிறகு, லா சேப்பல் அரங்கில் இதயம் கனிந்த தருணத்தில் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன. பதக்க விழாவைத் தொடர்ந்து, ஹுவாங்கின் ஒலிம்பிக் அணி வீரரும், ஆடவர் இரட்டையர் ஆட்டக்காரருமான லியு யுச்சென், முழங்காலில் மண்டியிட்டு மலர் கொத்து கொடுத்து தன்னை திருமணம் செய்து கொள்வதற்கான வேண்டுகோளை விடுத்தார். உணர்ச்சிவசப்பட்ட ஹுவாங் அதை ஏற்றுக்கொண்டார், லியு தனது விரலில் மோதிரத்தை வைத்தபோது கூட்டம் ஆரவாரத்தில் கிளந்து எழுந்தது.
2,700 ரோஜாக்களுடன் காதலை வெளிப்படுத்திய ஒலிம்பிக் வீரர்!
தங்கப் பதக்கம் வென்ற வீரர் ஒருவர் தனது நீண்டநாள் தோழியிடம், ஈபிள் கோபுரம் முன்பு காதலை வெளிப்படுத்தியுள்ளார். பாட்மின்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனையிடம் சக வீரர் நேற்று தனது காதலை வெளிப்படுத்தினார்.
படகுப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டீன் பெஸ்ட், தனது குழுவைச் சேர்ந்த 3 பேருடன் சேர்ந்து தங்கப் பதக்கம் வென்றார்.
தங்கம் வென்றதை விட மிக முக்கியமான நாள் ஜஸ்டீன் வாழ்வில் இன்று அமைந்தது. அவர் தனது நீண்ட நாள் தோழியான லைனே ஒலிவியா டுன்கேனிடம், நேற்று தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் இதனை அவர் சாதாரணமாகச் செய்யவில்லை.
மஞ்சள் ரோஜா தனது காதலிக்கு மிகவும் பிடித்தமானது என்றும், 2,738 என்பது அவர்கள் பழகிவரும் நாள்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்நாப்சேட் என்னும் சமூக வலைதளத்தில் அறிமுகமான நாள்முதல் இன்று வரை கணக்கிட்டு 2,738 மஞ்சள் ரோஜாக்களுக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
ஜஸ்டீன் பெஸ்ட் – லைனே ஒலிவியா டுன்கேனிடம் மண்டியிட்டு மோதிரம் நீட்டி காதலை வெளிப்படுத்திய தருணத்தை அந்நாட்டு ஊடகங்கள் நேரலை செய்தன.
இது குறித்து பேசிய ஜஸ்டீன், எங்கள் காதல் உண்மையில் இப்போது அழியாததகி யுள்ளது. நான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதுதான் என் வாழ்நாளின் சிறந்த நாள் எனக் குறிப்பிட்டார்.
அர்ஜென்டினா அணியில் பாப்லோ சிமோனெட் (Pablo Simonet) மற்றும் பிலர் காம்போய் (Pilar Campoy). தாங்கள் திருமண நிச்சயம் செய்துகொள்ள இதை விட சிறந்த தருணம் இல்லை என்று இருவரும் நினைக்கிறார்கள்.
வெள்ளிக்கிழமை, அவர்கள் தங்கள் நண்பர்கள் முன்னிலையில் அடக்கமாக நிச்சயதார்த்தம் செய்தனர். அந்த புகைப்படங்களை ஒலிம்பிக் அமைப்பாளர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
9 ஆண்டுகளாக டேட்டிங்
பாப்லோவும் பிலரும் 2015 முதல் டேட்டிங் செய்து வருகின்றனர். தங்களது 9 வருட காதல் பயணத்தை ஒலிம்பிக் மைதானத்தில் வெளிப்படுத்தி தம்பதிகளாக மாற விரும்பினர்.
முதலில், பாப்லோ மண்டியிட்டு பிலரிடம் முன்மொழிந்தார். பிலர் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார். உடனே பாப்லோ மோதிரத்தை போட்டு நிச்சயதார்த்தத்தை முடித்தார். பின்னர் இருவரும் தங்களது குழு உறுப்பினர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். அது மாத்திரமல்ல பல காதல் ஜோடிகளின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி கொண்டு தான் இருக்கின்றன.