ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தனிப்பட்ட எந்தவொரு பிரச்சனையும் இல்லையென ஐக்கிய மக்கள்ள சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவிடம் தான் அரசியலை கற்றுக்கொண்டதாக தெரிவித்த ஹர்ச டி சில்வா தன்னை அரசியலுக்கு கொண்டு வந்தவர் ரணில் விக்கிரமசிங்கவே என கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“மெட்ச்சில் நாங்கள் சந்தித்து நல்ல பீர் அருந்திவிட்டு பாட்டு பாடுவோம். அதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஆனால் கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிரச்சினை உள்ளது. இவர்களுடன் இணைந்து முன்வைக்கப்பட்ட மாதிரிக்கு நான் எதிரானவன். சிலர் அதைப் புரிந்துக்கொள்ளவில்லை.
அவர்கள் தாளில் உள்ளதைப் பார்த்து சில எண்களைப் கற்கிறார்கள். புரிந்து கொண்டால் தாள்களை வாசிப்பதில் அர்த்தமில்லை” என்றார்.