இலங்கைத் தீவில் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வேட்பாளர்களே முன்னிலையாகயிருந்தனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வேட்பாளர்களே முன்னிலையாகியிருந்தாலும் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டி பிரதான இரு வேட்பாளர்களுக்கு இடையிலேயே காணப்பட்டது.
மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்ட வேட்பாளருக்கு பிரதான இரு வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட வாக்கு வீதத்துக்கு அருகிலும் கூட வர முடியாத சூழ்நிலையே கடந்த பல தசாப்தங்களாக நிலவியது.
ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்கு வீதத்தை பெற்றுக் கொள்ளும் வேட்பாளரை வெற்றியாளர் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும்.
எனினும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னிலையாகும் வேட்பாளர்கள் எவருக்கும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்கு வீதத்தை பெற முடியவில்லை எனில் வெற்றியாளரை தேரந்தெடுக்கும் விதம் சற்று சிக்கலாகும்.
அதன்போது தேர்தல் அதிகாரிகள் மூலம் வாக்களார்கள் தெரிவு செய்த இரண்டாவது மற்றும் மூன்றாவது வெற்றியாளரை தெரிவு செய்ய எண்ணிக்கை இடம்பெறும்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளரை தெரிவு செய்வதற்கான வழிமுறைகள் இவையே என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய மற்றும் அதன் முன்னாள் உறுப்பினர் எம்.எம். மொஹம்மட் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது விருப்ப வாக்குமூலம் ஜனாதிபதியை தெரிவுசெய்ய முடியாவிடின் திருவுளச்சீட்டு முறை பயன்படுத்தப்படும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.