ஷேக் ஹசீனா மாளிக்கைக்குள் சென்று உணவுகளை ருசி பார்த்த போராட்டக்காரர்கள்!

0
52

ஷேக் ஹசீனா மாளிக்கைக்குள் சென்ற போராட்டக்காரர்கள் தற்காலிக கூடாரத்திற்கு தீ வைத்ததுடன் மாளிகையில் உள்ள சமையல் அறைக்கு சென்று உணவுகளை ருசி பார்த்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, அங்கிருந்து படுக்கையில் படுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர். சிலர் ஷேக் ஹசீனா வரைந்து வைத்திருந்த புகைப்படங்கள், அவருடைய சேலைகள் கண்ணில் பட்டதையெல்லாம் கொள்ளைடியத்தனர்.

பெரும்பாலான போராட்டக்காரர்கள் மாளிகை வளாகத்தில் வளர்க்கப்பட்ட வாத்து, முயல், கோழி போன்றவற்றை பிடித்துச் சென்றனர். 

இதற்கிடையே வங்காளதேச சுதந்திரத்திற்கு முக்கிய காரணமாக இருந்த ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபுர் ரஹ்மான் சிலையை போராட்டக்காரர்கள் உடைத்தனர்.