தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் உடல் நேற்று வெள்ளிக்கிழமை கட்டாரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
டோஹாவில் அமைந்துள்ள அப்துல்-அல் வஹாப் பள்ளிவாசலில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கட்டார் ஜனாதிபதி ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி, ஹனீயோவுக்கு அடுத்தபடியாக பொறுப்பேற்கலாம் என்ற கூறப்புடும் காலித் மிஷால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இறுதிச் சடங்கில் பலஸ்தீனத்தின் கொடி போர்த்தப்பட்ட ஹனீயேவின் பூதவுடன் தாங்கிய பெட்டியைச் சுற்றி அவருடன் கொல்லப்பட்ட பாதுகாவலர்களின் பூதவுடல் தாங்கிய பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. இறுதியில் கட்டாரின் தலைநகர் டோஹாவில் இஸ்மாயில் ஹனீயேவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.