ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (02) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத்தினை இன்றைய தினம் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து ஜனாதிபதி பல்வேறு அமைப்புகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று தெரியவருகின்றது.