யாழ்ப்பாணத்திற்கு தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா மீண்டும் குடும்பத்துடன் வருகை தந்துள்ளார். யாழ். சர்வதேச விமான நிலையம் ஊடாக தனியார் விமானம் ஒன்றில் (31-07-2024) மதியம் வருகை தந்துள்ளார்.
ரம்பா குடும்பத்தினரினால் யாழில் நடத்தப்படுகின்றன தனியார் பல்கலைக்கழகத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் ரம்பாவின் கணவரின் பிறந்தநாளை யாழ்ப்பாணத்தில் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடுவதற்காவே அவர் வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.