வந்தாச்சு பறக்கும் டாக்ஸி: இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது

0
147

ஜெர்மனி மற்றும் தென்கொரிய நிறுவனங்கள் இணைந்து பறக்கும் டாக்சி – Air taxi தயாரித்துள்ளன. விமானங்களைப் போல வானில் பறக்கும் இந்த டாக்சிகளில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

இந்த Supernal e-taxiயை ஒரு தடவை சார்ஜ் செய்தால் சுமார் 96 கிலோமீட்டர் வரையில் பறக்கும் என கூறப்படுகிறது. நான்கு பேர் வரையில் பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த டாக்சி அதிகபட்ச வேகம் 200 கிலோமீட்டர்.

ஒரு இடத்திலிருந்து செங்குத்தாக மேலெழும்பி, குறிப்பிட்ட ஒரு உயரத்துக்கு சென்றதும் பக்கவாட்டு திசையில் பயணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

என்னதான் தொழில்நுட்ப ரீதியில் இந்த பறக்கும் டாக்சி சாத்தியப்பட்டாலும் இதனை வெற்றிகரமாக செயல்பட வைக்க பல வருடங்கள் ஆகும் என கூறப்படுகிறது.