ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அவரது நாடாளுமன்ற விவகாரச் செயலாளராக கடமையாற்றிய குமாரசிறி ஹெட்டிகே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.
சஜித் பிரேமதாச இவரை மாத்தறை மாவட்ட அமைப்பாளராக பதவிக்கு நியமித்துள்ளார். குமாரசிறி ஹெட்டிகே பல தசாப்தங்களாக அரசியல் விவகாரங்களில் மகிந்த ராஜபக்சவுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.