அரசியலமைப்பு திருத்தங்கள் தேவையற்றது: பாட்டலி சம்பிக்க ரணவக்க

0
78

இலங்கைக்கு தற்போது அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியமற்றது எனவும் ஜனாதிபதி தேர்தலே அவசியமானது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தேசத்திற்காக ஒன்றுபடுதல் எனும் தொனிப்பொருளில் கம்பஹாவில் இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கு நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதித் தேர்தலை சிலர் ஒத்திவைக்க முயற்சிக்கின்ற போதிலும், ஜனாதிபதித் தேர்தலை செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கும் இடையில் நடத்த வேண்டும்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு 2028ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாடு திவாலாகும் அபாயம் காணப்படுகின்றது. அந்த காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் எமது கட்சிக்கு உள்ளது.

ராஜபக்ச ஆதரிக்கும் எந்த வேட்பாளரையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். எங்களுடைய வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களுடன் அரசியல் பயணத்தை மேற்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் எனும் போர்வையில் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.