சுகாதார கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவர தன் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
ஆகையினால் தன் தலையை நோக்கிச் சுடுமாறும், கால்களில் சுட வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பேஸ்புக் நேரலையில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்களை சென்றடையும் வகையில் அவர் குறித்த காணொளியில் சிங்கள மொழியில் பேசியிருந்தார். இதன்போது தான் எதிர்கொண்ட சாவால்களை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு பதில் அத்தியட்சகராக தான் நியமிக்கப்பட்டது முதல் அங்கு இடம்பெற்ற அனைத்து விடங்களையும் சிங்கள மக்களுக்கு சென்றடையும் வகையில் அவர் பேசியுள்ளார்.
தான் குறித்த வைத்தயிசாலையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தியதாகவும், இதனால் என்னை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் ஒருபகுதியாக வைத்தியசாலையை கைவிட்டு வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தான் வைத்தியசாலையில் இருந்து செல்வதாகவும், ஆகையினால் வைத்தியர்களை கடமைக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காலப்பகுதில் தான் தனி ஒருவராக வைத்தியம் பார்த்ததாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனால் தான் குறித்த வைத்தியசாலையில் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டும் என கோரி பொது மக்கள் போராட்டம் செய்தனர்.
வடக்கில் உள்ள மக்களுக்கு நாட்டை பிளவுப்படுத்தும் எண்ணம் இல்லை. வடக்கில் உள்ள அரசியல்வாதிகளே இவ்வாறு பேசுகின்றனர். அதனை கணக்கில் கொள்ள வேண்டாம்.
இந்நிலையில், நாட்டில் உள்ள வைத்தியர்கள் தமக்கு தேவையான வகையில் கட்டமைப்புகளை மாற்றிக் கொள்ள முடிவும் என நம்புகின்றனர்.
தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் வடக்கின் சுகாதார அபிவிருத்திகளுக்கு நிதி வழங்குகின்றனர். எனினும் அந்த நிதி மீளவும் அமைச்சுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றது.
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி ராஜா போல் செயற்படுகின்றார். சுகாதாரம் தொடர்பில் வடக்கு மாகாணம் வேறொரு நாடு போல் செயற்படுகின்றது.
யாழ் போதனா வைத்தியசாலையில் அபிவிருத்தி பணிகளை செய்ய வைத்தியர் சத்தியமூர்த்தியின் காலை பிடிக்க வேண்டியுள்ளது. நான் சொல்வது பொய்யாக இருந்தால் விசாரணைகளை ஆரம்பியுங்கள்.
நான் இதைச் சொல்வதால் என்னை கொலை செய்யக் கூடும். எனினும் நான் பயப்படப் போவதில்லை. சுகாதார கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவர தன் உயிரையும் தியாகம் செய்ய தயராக இருக்கிறேன். ஆகையினால் தன் தலையை நோக்கிச் சுடுமாறும், கால்களில் சுட வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.