சமூக வலைதளங்களில் வைரலாகும் West Indies Test match போட்டியில் சமர் ஜோசப்பின் அதிரடி சிக்ஸர்!

0
115

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியில் சமர் ஜோசப் அடித்த சிக்ஸரில் மைதான மேற்கூரை உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹோமில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் கடைசியாக களமிறங்கிய சமர் ஜோசப் 27 பந்துகளில் 33 ஓட்டங்களை அடித்து டெஸ்ட் போட்டியில் ஒரு ரி 20 போட்டி போல விளையாடிக் கொண்டிருந்தார்.

எவ்வாறெனில் 107வது ஓவரில் கஸ் அட்கின்ஸன் வீசிய பந்தை சமர் ஜோசப் அடித்து நொருக்கினார். குறிப்பாக அந்த பந்து மிக உயரமாக சென்று சிக்ஸர் ஆனது.

அப்போது மைதானத்தின் மேல் இருந்த ஓடுகளில் வேகமாக பந்து மோதியதில் ஓடுகள் சிதறி கீழே இருந்த பார்வையாளர்கள் மீது விழுந்தன.

ஆனால் அதிஷ்டவசமாக அதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சமர் ஜோசப்பின் அதிரடி சிக்ஸர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.