உதவ மறுத்த பிரித்தானியா: உக்ரைனுக்கு விழுந்த பேரிடி

0
56

ரஷ்யாவுக்கு (Russia) எதிராக பிரித்தானிய ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி வொலொடிமிர்  ஜெலன்ஸ்கியின் (Volodymyr Zelensky) கோரிக்கையை பிரித்தானியா (Brittan) நிராகரித்துள்ளது.

அத்துடன், ரஷ்யாவின் இலக்குகளை தாக்குவதற்கு உதவ முடியாது என்றும் பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி (John Healey) பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான எந்த தாக்குதலுக்கும் ஒருபோதும் பிரித்தானியா உடன்படாது எனவும் ஜான் ஹீலி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், உக்ரைன் மக்களின் பாதுகாப்பை நோக்கமாக கொண்டு மாத்திரமே பிரித்தானியா, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ரஷ்யாவின் இலக்குகளை பிரித்தானியா தாக்க முடியாது என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், அதனை உக்ரைன் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.    

இதேவேளை, ரிஷி சுனக் அரசாங்கம் அளித்து வந்த ஆதரவை கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கமும் தொடரும் என உக்ரைன் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.