யாழில் இருந்து விரட்டப்பட்ட மற்றுமொரு மருத்துவர்; கிழிக்கப்படும் மருத்துவ மாஃபியாக்களின் முகமூடி!

0
106

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவ ஊழல்களை அம்பலப்படுத்திய மருத்துவ அத்தியட்சகர் மருத்துவர் அருச்சுனா இராமநாதன் வெளியேற்றப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து விரட்டப்பட்ட மற்றுமொரு பிரபல புற்றுநோய் மருத்துவர் வெளியிட்ட தகவல்கள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய புற்றுநோய் மருத்துவ நிபுணர் நடராஜா ஜெயக்குமாரனே இந்த தகவல்களை கூறியுள்ளார்.

2004 முதல் 2012 யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாளையில் கடமையாற்றிய வேளை அங்கு நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வந்தால் யாழ் போதனா வைத்தியசாலையின் அத்தியேட்சகரால் தான் யாழ்ப்பாணத்தில் இருந்து  விரட்டப்பட்டதாக கூறியுள்ளார்.

புற்றுநோய் மருத்துவ நிபுணர் நடராஜா ஜெயக்குமாரன், தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமைக்கு யாழ் போதனா வைத்தியசாலையின் அத்தியேட்சகர் மருத்துவர் சத்தியமூர்த்தி மீது மிகக் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்வியிலேயே அவர் இந்த குற்றசாட்டுக்களை அம்பலப்படுத்தியுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் நிபுணராகக் கடமையாற்றிய தன்னை ஊழல்கலை வெளிப்படுத்தியதற்காக, உயிர் அச்சுறுத்தல் கொடுத்த வீட்டை அடித்து நொருக்கி எரித்து யாழ் மருத்துவ அதிகாரிகள் யாழில் இருந்து தன்னை விரட்டி அடித்ததாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இதன்போது மருத்துவர் சத்தியமூர்த்தியின் பெயரைச் சொல்வதற்கே அருவருப்படைந்த மருத்துவர் நடராஜா ஜெயகுமாரன், அவருடைய பதவியைக் குறிப்பிட்டே இந்த விமர்சனத்தை வைத்தார்.

தனது குடும்பத்தையும் இவர்கள் வன்முறையால் அச்சுறுத்தியதால், தன்னால் மேற்கொண்டு அங்கு பணிபுரிய முடியவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து மகரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனை – அபேஸ்கா வில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக புற்றுநோய் சிகிச்சை நிபுணராக அவர் கடமையாற்றி வருகின்றதாகவும் கூறினார்

யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் டொக்டர் அர்சுனாவால் அம்பலத்துக்கு வந்ததையடுத்து யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தனது சகோதரன் இராசரத்தினம் பிரகாஸ் இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் முதலுதவிச் சிகிச்சை கூட வழங்கபடாமல் பரிதாபமாக உயிரிழந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

தனது சகோதரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கும் உடனயாக சிகிச்சை அளிக்கப்படாமல் எட்டு மணி நேரத்துக்குப் பின், இரத்தப்போக்கால் உயிரிழந்ததாகவும் அவர் வேதனை வெளியிட்டார்.

அதேசமயம் யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உள்ள புற்றுநோய் மருத்துவ நிபுணர் மருத்துவர் கிருசாந்தி தங்களது தந்தையர்களுடைய புற்றுநோய்யை குணமாக்குவதிலோ நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதிலோ எவ்வித அக்கறையும் காட்டவில்லை என கொடிகாமம், சுன்னாகம் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை மகரகமையில் மருத்துவர் நடராஜா ஜெயக்குமாரனின் சிகிச்சையால் தங்கள் தந்தையர் குணமமைந்ததாகவும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை நம்பியிருந்திருந்தால் தங்கள் தந்தையர்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மருத்துவர் நடராஜா விஜயகுமாரனின் நன்மதிப்பை அறிந்து பலர் யாழில் இருந்து மகரகம சென்று சிகிச்சை எடுக்கின்றனர்.

இந்நிலையில் முக்கிய சிகிச்சைகள் முடிவடைந்து குணமானவர்கள் ஊர் திரும்பியபின் வழமையான பரிசோதணைகளை யாழ் தெல்லிப்பளையில் செய்யும்படி மகரமக வைத்தியசாலை கடிதம் கொடுத்துவிட்டால் யாழ் தெல்லிப்பளையில் இந்த நோயாளிகளை சிகிச்சை அளிக்காமல் அவர்களை அலைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும் மருத்துவர் நடராஜா ஜெயக்குமாரன் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பில் மருத்துவர் சத்தியமூர்ந்தி உட்பட ஐவர் கையெழுத்திட்டு மருத்துவர் நடராஜா ஜெயகுமாரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், அவர் தேவையற்ற விதத்தில் தன்னுடைய நோயாளிகளை தங்களுக்கு அனுப்பி வைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்தவகையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மருத்துவர் அருச்சுனா இராம்நாதனுக்கு என்ன நடந்ததோ அதுவே தனக்கு 2012 இல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நிகழ்ந்தது என்கிறார் மருத்துவர் நடராஜா ஜெயக்குமாரன்.

அதேவேளை இலங்கையில் உள்ள மக்களுக்கு தனக்கு பொருத்தமான வசதியான இடத்தில் சிகிச்சையைப் பெறுவதற்கு முழு உரிமையும் உண்டு. அரசாங்கம் மருத்துவர்களுக்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கே சம்பளம் வழங்குகிறது.

ஆனால் மருத்துவர் சத்தியமூர்த்தி தனிப்பட்ட முறையில் மருத்துவர் நடராஜா ஜெயகுமாரனைப் பழிவாங்கவே இவ்விதமாக நடந்தகொள்வதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தநிலையில் யாழ்ப்பாண மருத்துவ மாபியாக்கள் மருத்துவத்துறையை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக அங்குள்ள கண்ணியமான கறைபடியாத மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலும் யாழ் நோக்கி வரும் சிறந்த மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலுமே குறியாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.