யாழ் சாவகச்சேரி வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் இவரே; சுகாதார அமைச்சர்!

0
71

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரி கோபாலமூர்த்தி ரஜீவ், வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் RD.P.G.மகிபால மற்றும் Dr. அசேல குணவர்த்தன உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி வைத்தியசாலையின் அதிகாரிகள் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதேவேளை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஐயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.