மருத்துவர் அருச்சுனா வெளியேறாவிட்டால் பணிப்புறக்கணிப்பு; சாவகச்சேரி GMOA எச்சரிக்கை!

0
58

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அருச்சுனாவை இன்று (17) காலை 8 மணிக்கு முன்னதாக வெளியேற்ற வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அருச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்து சாவகச்சேரி வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளையினர் (GMOA) அறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

மேலும் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அருச்சுனா விடுதியை விட்டு வெளியேற மறுத்தால் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிப்போம் என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை மாண்புமிகு நீதிபதி அவர்களால் மிகத் தெளிவாக என்னை ஆதார வைத்தியசாலை எனக்குரிய தங்கு விடுதிகளில் தொடர்ந்து இருக்கலாம் என்பதையும் அது அடிப்படை உரிமை என்பதையும் ஏற்றுக்கொண்டிருந்தும் வைத்திய அதிகாரிகள் சங்கம் நீதிமன்றத்தை அவதூறு செய்யும் நிலையில் மேற்படி தொழிற்சங்க போராட்டத்தை அறிவித்திருப்பது என்பது இலங்கையில் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும் என நான் கருதுகிறேன் என்றும் மருத்துவர் அருச்சுனா இராமநாதன் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.