லண்டனில் டென்னிஸ் போட்டி மைதானத்தில் திருமண நாளை கொண்டாடிய இந்திய தம்பதி!

0
121

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி மைதானத்தில் இந்தியாவை சேர்ந்த தம்பதி தங்களது 36-வது திருமண நாளை கொண்டாடிய காட்சிகள் இணையத்தில் வைரலானது.

அந்த தம்பதியினர் டென்னிஸ் போட்டிகளை நேரில் பார்த்தவாறு தங்களது கனவை நிறைவேற்றி கொண்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

அந்த வீடியோவில், தம்பதியினர் ஸ்ட்ராபெர்ரி மற்றும் கிரீம் சுவைத்தவாறு திருமண நாளை கொண்டாடினர். அவர்களின் இந்த கொண்டாட்ட வீடியோ விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இதைப்பார்த்த பயனர்கள் அந்த தம்பதியினரை வாழ்த்தி பதிவிட்டனர்.

அந்த தம்பதியினர் கூறுகையில்,

1970-களிலிருந்து டென்னிஸ் ரசிகராக இருக்கிறோம். இது எங்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது. ஏனெனில் இது எங்கள் இருவரின் கனவாகும் என்று குறிப்பிட்டனர்.