சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் அதிரடியாக நுழைந்த பொலிஸார்; மக்களின் எதிர்ப்பால் ஏமாற்றம்

0
99

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை இரவோடு இரவாக கைது செய்ய வந்த பொலிஸார் மக்களின் பாரிய எதிர்ப்பை அடுத்து அவரை கைது செய்யவில்லை. 

இந்த தகவல் பற்றிய விடயங்கள் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை பொலிஸார் கைது செய்வதற்கு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் கூடியுள்ளனர்.

இந்நிலையில் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனா வைத்தியசாலையை விட்டு வெயியேற முயற்சிப்பதையடுத்து மக்கள் அவரை வழிமறிக்கின்றனர்.

இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்வதற்காக சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் வைத்தியசாலைக்குள் உள்ளனர்.

வைத்தியசாலையின் பிரதான மின் கட்டமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் இருந்த ஊடகவியலாளர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்று இறுக்கமான சூழ்நிலை காணப்படுகின்றதாக தெரியவந்துள்ளது.