கெஹெலியவின் பாதையில் செல்கிறாரா சஜித்?: உள்ளக விசாரணைகள் ஆரம்பம்

0
59

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச 2015-2019 வரையிலான காலப்பகுதியில் வீடமைப்பு அமைச்சராக இருந்த சந்தர்ப்பத்தில் நடைமுறைப்படுத்திய திட்டங்கள் தொடர்பில் உள்ளக கணக்காய்வு நடத்தப்பட்டு வருவதுடன், அரசியல் நோக்கத்துடன் இது மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் அமுல்படுத்தப்பட்ட 184,463 வீடமைப்புத் திட்டங்களும் சஜித் பிரேமதாசவின் மேற்பார்வையில் நேரடியாக நிர்வகிக்கப்பட்டதாகவும், அதற்காக ஒதுக்கப்பட்ட தொகைக்கு அப்பால் சட்டவிரோதமான முறையில் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.

அன்றைய காலகட்டத்தில், மாதிரி கிராமத் திட்டம், விநியோகக் கடன் திட்டம், “கிராம சக்தி பரவல் உதவி”, விருமிதுரு,சிறுநீரக உதவி, வடக்கில் வெள்ளத்தால் ஏற்பட்ட வீடுகளைச் சீரமைக்க உதவி என பல வீட்டுத் திட்டங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் போலி மருந்து வியாபாரம் தொடர்பில் அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ள விவாதத்தை தொடர்ந்து இந்த உள்ளக கணக்காய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.