14 ஆண்டின் பின் ஆட்சியை கைப்பற்றிய தொழிலாளர் கட்சி; தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக்

0
116

பிரிட்டனின் தேசியத் தேர்தலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சியின் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், தொழிலாளர் கட்சி சுமார் 170 இடங்களில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.

அதன்படி, பிரிட்டன் பிரதமராக கீர் ஸ்டார்மர் நியமிக்கப்படுவார். அதேவேளை பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது விசேட அம்சமாகும்.

இலண்டனில் இருந்து தனது ஆதரவாளர்களுக்கு உரையாற்றிய ஸ்டார்மர் மாற்றம் இப்போது தொடங்குகிறது எனத் தெரிவித்துள்ளார்.