சம்பந்தன் மறைவு – இலங்கைக்கு வருகிறார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்?

0
38

மறைந்த இலங்கை தமிழரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதி நிகழ்வுகள் திருகோணமலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவுள்ளதாக அவரே தன்னிடம் தொலைபேசி மூலம் உறுதி செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளபோதும், அதுதொடர்பில் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை எனவும் சிறிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.