ஆஹா என்ன அழகு!: விண்வெளியில் இருந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க கோடிக் கண்கள் தேவை

0
80

சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். பூமியிலிருந்து பார்க்கும்போதே இவ்வளவு அழகாக இருக்கிறதே விண்வெளியில் இருந்து இந்தக் காட்சியைப் பார்க்க எப்படியிருக்கும்?

அந்த ஆசையையும் நிறைவேற்றும் விதமாக,

கடந்த சில வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பிய விண்வெளி வீரரான அலெக்சாண்டர் ஜெர்ஸ்ட் சூரிய அஸ்தமனத்தின் அரிய காட்சியானது விண்வெளியிலிருந்து பார்த்தால் எப்படியிருக்கும் என்பதை அறிய அதனையொரு வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

மேகங்கள் மற்றும் இருளில் மூடப்பட்டிருக்கும் பூமியின் ஒரு பகுதியில் இளஞ்சிவப்பு ஒளி படர்ந்திருப்பது தெரிகிறது. மேலும் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள மேகங்கள் இளஞ்சிவப்பு மற்றும் செம்மஞ்சள் நிறத்தில் ஒளிர்கின்றமையை நம்மால் காணக்கூடியதாக உள்ளது.

அலெக்சாண்டர் ஜெர்ஸ்ட் 2018ஆம் ஆண்டளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் தளபதியாக இருந்தவர். அச்சமயம் இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டபோது பல்லாயிரக்கணக்கானோர் அதனை ரசித்தனர். இப்போது மீண்டும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.