விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜே.வி.பி: பிள்ளையானுக்கு பதில் வழங்கிய தேசிய மக்கள் சக்தி

0
30

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஜே.வி.பியினர் ஆயுதம் வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் பிள்ளையானால் (Pillayan) முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அந்த கட்சி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

கடந்த 1988 ஆம் மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் விடுதலை புலிகளுக்கு ஜே.வி.பியினர் ஆயுதம் வழங்கியமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அந்த கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இதனை தெரிவித்துள்ளார்.

பிள்ளையானால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிடுவதில் எந்தவொரு பலனும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவின் முப்படைகளில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட காவல்துறை மா அதிபர்கள் தற்போது தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை பாதுகாத்த படையினர், காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் தமது கட்சி பயணிப்பதாக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.