மியன்மாரில் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரித்த முதலாளி கைது

0
26

மியன்மார் (Myanmar) நாட்டில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததற்காக ஒரு வியாபார நிலைய உரிமையாளரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த உரிமையாளரின் 3 கைபேசி கடைகளையும் அந்நாட்டு அரசு மூடியுள்ளது.

தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த காரணத்திற்காக இதேபோல் 10 முதலாளிகளை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியன்மார் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்தால் விலைவாசி விண்ணை தொடும். பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் இந்நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்பதை மக்கள் நம்ப ஆரம்பிப்பார்கள்.

இது அரசுக்கு தலைகுனிவாகும். இது ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை தூண்டும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது. மியன்மார் நாட்டின் இந்த நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். விலைவாசி உயர்வுக்கு மத்தியில் வேலையும் இல்லாமல் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.