கடலில் மிதந்து வந்த பாட்டிலில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்த 5 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்து நிலையில் உயிரிழப்பதற்கு முன்பு அவர்கள் எடுத்த செல்ஃபி வெளியாகியுள்ளது.
மன்னார் – தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்புக்கு கடந்த 6 ஆம் திகதி 6 மீனவர்களுடன் சென்ற ‘Devon 5’ மீன்பிடிக் கப்பலில் பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.
உயிரிழந்தவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது, கடலில் மிதந்த பாட்டிலில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்துள்ளனர். அதனை குடித்த அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.
கப்பலில் பயணித்த 42 வயதான நயன காந்த, 24 வயதான பதும் டில்ஷான், 32 வயதான சுஜித் சஞ்சீவ, 33 வயதான பிரதீப் நிஷாந்த மற்றும் 68 வயதான அஜித் குமார ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்துவதற்கு முன் பாட்டிலுடன் உயிரிழந்த மீனவர்களும் தற்போது ஆபத்தான நிலையில் உள்ள மீனவர்களும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.