சம்பந்தன் இடத்திற்கு எஸ். குகதாசன்; சபாநாயகர் அறிவிப்பு

0
68

சம்பந்தன் ஐயாவின் மறைவு மற்றும் வெற்றிடம் இன்று சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. தேர்தல் சட்ட விதிகளின் படி சம்பந்தன் வெற்றிடத்திற்கு எஸ் குகதாசன் தெரிவாகின்றார்.

அடுத்த சில தினங்களில் தேர்தல் ஆணையத்தின் வர்த்தமானியில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும். எதிர்வரும் (09/07/2024) செவ்வாய் கிழமை மீண்டும் நாடாளுமன்றம் கூடும் வேளை பதவி பிரமாணம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் கடந்த 2020 தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற குழுத்தலைவராக சம்பந்தன் ஐயாவை மீண்டும் தெரிந்தனர்.

தற்போது அவர் மறைவால் மீண்டும் 10, பேரும் ஒரு பாராளுமன்ற குழுத்தலைவரை தெரிவு செய்யவேண்டும். ஆனால் அவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவராக கருதப்படமாட்டாது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவர் தெரிவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே வரவேண்டும் என்ற விதிஇல்லை. கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவரையும் கட்சிகள் வி்ரும்பினால் தெரிவுசெய்யலாம்.

ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் தெரிவு இப்போதைக்கு அவசியம் அடுத்த பொதுத்தேர்தல் இடம்பெறும்வரை அப்படி ஒரு தலைவர் தெரிவு அவசியம் இல்லை என்பதே எனது கருத்து.

சிலர் பாராளுமன்ற குழும்தலைவர் பதவியை தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவராக ஒப்பீடு செய்வது தவறான புரிதல் என பா.அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.