கிரிக்கெட் உலகில் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து வீரரான ஒல்லி ரோபின்சன் (Ollie Robinson) படைத்துள்ளார்.
உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டியொன்றில் ஒரு ஓவரில் ஒன்பது பந்துகளை வீசிய அவர் 43 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார். இது முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த ஓவராகும்.
2021 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகமான வலது கை பந்துவீச்சாளர் ரோபின்சன், இங்கிலாந்து அணிக்காக 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 76 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஹோவில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடந்த பிரிவு இரண்டில் லீசெஸ்டர்ஷைருக்கு எதிரான சசெக்ஸ் அணி சார்பில் ரோபின்சன் விளையாடிக்கொண்டிருந்தார்.
இதன்போது லீசெஸ்டர்ஷையரின் லூயிஸ் கிம்பர், ரோபின்சன் வீசிய 13வது ஓவரில் ஐந்து ஆறு ஓட்டங்கள், மூன்று நான்கு ஓட்டங்கள் அடங்களாக 43 ஓட்டங்களை குவித்தார்.
இந்தப் போட்டியில் லூயிஸ் கிம்பர் 65 பந்துகளில் 109 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக ஒரு ஓவரில் அதிக ஓட்டங்களை வீரர் என்ற மோசமான சாதனையையும் ரோபின்சன் முறியடித்துள்ளார்.
முன்னாள் டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர் அலெக்ஸ் டியூடர் ஒரு ஓவரில் 38 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தமையே இதுவரை மோசமான சாதனையாக இருந்து.
இருப்பினும் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் மோசமான ஓவரை வீசி அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த சாதனை 1990ஆம் ஆண்டு பதிவானது.
1989-1990 இல் வெலிங்டன் மற்றும் கேன்டர்பரி இடையேயான ஷெல் டிராபி ஆட்டத்தின் போது நியூசிலாந்தின் முன்னாள் பந்துவீச்சாளர் வெர்ட் வான்ஸ் ஒரு ஓவரில் 77 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.