அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

0
34

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயமாக உயர்த்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.

அத்துடன் சில அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப அரச ஊழியர்கள் வீதியில் இறங்க வேண்டாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்றையதினம் (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நாடு முன்னோக்கி செல்லும் போது ஜே.வி.பி மற்றும் ஐ.ம.சக்தியின் அரச ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அடுத்த மாதம் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருவார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் நாம் ஆர்ப்பாட்டம் நடத்தும்போது சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருவார்களா 

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகிறோம். சம்பள முரண்பாடு குறித்து ஆராய அதிபர் குழுவொன்றை நியமித்துள்ளார். வரும்  வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் கண்டிப்பாக உயர்த்தப்படும்.

அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் அமைச்சரவைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் நாட்டை மீட்கும் பொருளாதார திட்டத்தைப் பற்றி பேசுவதில்லை.

அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வழங்காமல், ஓய்வுபெற்ற அதிபர்களின் சம்பளத்தை இடைநிறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர்.

நாட்டில் 14 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர். அவர்களைப் பற்றி ஜே.வி.பியின் கருத்தைச் சொல்லுங்கள். இன்று மக்கள் நாட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

மக்கள் புதிய தொழில் துறைகளைத் தொடங்கியுள்ளார்கள். நாடு நம்பிக்கையான பாதையில் செல்லும் போது, இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான நாடு உருவாகும் போது, நாட்டை செயலிழக்கச் செய்யும் வகையில் செயல்படாதீர்கள்.

இந்த இக்கட்டான நேரத்தில், இரண்டு அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப அரச ஊழியர்கள் வீதியில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு நடந்தால் மீண்டும் உரிமையான நாட்டை இழக்க நேரிடும் என்றும் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!