2028 ஆம் ஆண்டுவரை கடனை செலுத்த தேவையில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதுடன் அதனை 2043 ஆம் ஆண்டுவரை நீடிக்கப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இதோ ஒரு நற்செய்தி என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி இலங்கை மக்களுக்கு ஆற்றிவரும் உரையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
”சர்வதேச கடன் வழங்குநர்கள் மற்றும் சீன எக்சிம் வங்கியுடன் இணக்கப்பாடுகளை எட்டியுள்ளோம். இது நாட்டு மக்களுக்கு நற்செய்தியாகும்.
கடந்த இரண்டு வருடங்களாக பரிஸ் கிளப் ஊடாக நாம் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்புக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். லசார்ட் மற்றும் கிளசார்ட் போன்ற நிறுவனங்களும் எமக்கு இந்த பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கின.
இந்த இணக்கப்பாடுகள் ஊடாக 2028ஆம் ஆண்டுவரை கடன் செலுத்தல்களை பிற்போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனை 2043ஆம் ஆண்டுவரை நீடிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் முழுமையான உரை சிங்களத்தில்,