சட்டமா அதிபருக்கு சேவை நீடிப்பு: இன்று தீர்மானம் எட்டப்படுமா?

0
81

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரை இன்று (18) பாராளுமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் கூடுவதற்கான ஏற்பாடுகளை தயார் செய்துள்ளது.

சட்டமா அதிபரின் சேவைக்காலம் குறித்த ஜனாதிபதியின் பரிந்துரையை பரிசீலிப்பதற்காக அரசியலமைப்பு பேரவை இரண்டு தடவைகள் கூடிய போதிலும் இறுதித் தீர்மானம் எடுக்க முடியவில்லை.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், டிசம்பர் 31ஆம் திகதி வரை சேவை நீடிப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி சேவை நீடிப்பு வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் பரிந்துரைக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளன.

மேலதிக செய்திகள்