விஜயின் பிறந்த நாளுக்கு இன்னும் 5 நாட்கள்; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விஜய் அம்மாவின் பேட்டி

0
40

விஜய்யின் அம்மா ஷோபா கொடுத்த பழைய பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஷோபா கொடுத்த பழைய பேட்டியில் அவர், நானும் சங்கீதாவும் நல்ல நண்பர்கள். சங்கீதாவின் குடும்பத்தார் இலங்கையில் பிறந்து லண்டனில் வளர்ந்தவர்கள்.

சங்கீதா ஒரு டிப்பிக்கள் ஹவுஸ் வைஃப். குடும்பத்தை பார்த்துக் கொள்வதில் தலை சிறந்தவர். நான் சங்கீதாவுக்கு மாமியாராக இருப்பதும் அவர்களின் குழந்தைக்கு பாட்டியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வாரம் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து வருவார்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அந்த ஒரு மணி நேரம் மீண்டும் எப்போது வரும் என்று ஏங்கி கொண்டு இருப்பேன் என ஷோபா கூறியுள்ளார்.

விஜயின் பிறந்த நாள் இன்னும் 5 நாட்களில் வரவுள்ள நிலையில் விஜயின் ரசிகர்கள் விஜய் குறித்த தகவல்களையும் அவரது குடும்பம் குறித்த தகவல்களையும் அதிகமாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.