ஐஸ்கிரீமில் இருந்த மனிதவிரல்: உற்பத்தியாளர் உரிமத்தை உணவு பாதுகாப்பு துறை ரத்து

0
37

மும்பையைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்க்ரீம் ஒன்றை ஒன்லைனில் ஓர்டர் செய்து வாங்கி அதனை உண்ணத் தொடங்கியதும் அதில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் குறித்த ஐஸ்க்ரீமை ஆய்வுக்கு அனுப்பி, மனித விரலையும் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் உணவு பாதுகாப்பு துறையினர், குறித்த ஐஸ்க்ரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சென்று அங்கு சோதனை செய்துள்ளனர்.

இந்நிலையில் ஐஸ்க்ரீம் உற்பத்தியாளரின் உரிமத்தை பாதுகாப்பு துறையினர் ரத்து செய்துள்ளனர். இவர் மத்திய அரசின் உரிமம் பெற்று இயங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலையிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதோடு அவற்றை ஆய்வு செய்யப் போவதாகவும் உணவுப் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.