சிறுவர் உரிமைகளை மீறி செயற்படுவதை காரணமாகாக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை முதன் முறையாக இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் மற்றும் பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாட் குழுவை சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான குற்றப் பெயர் பட்டியலில் இணைத்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம் காசா மீது மேற்கொண்ட தாக்குதல்களில் சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் 155 வீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் 8000க்கும் அதிகமான பலஸ்தீன சிறுவர்கள் தீவிரமான துஸ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டனர். இஸ்ரேல் சிறுவர்களின் எண்ணிக்கை 113 என்று அறியப்படுகின்றது.
இஸ்ரேல் இராணுவத்தின் மூலம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடத்தும் குண்டுத் தாக்குதல்களால் இவ்வாறான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலின் பிரதிநிதி கிலாட் எர்டன்,
குறித்த பெயர் பட்டியலில் இஸ்ரேல் இராணுவத்தை உள்ளடக்குவதால், தான் வருத்தமடைந்ததாகவும் அவமானமடைந்ததாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் இன்னும் பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் பதிலளிக்கவில்லை.
கடந்த ஒக்ரோபர் மாதத்தில் இஸ்ரேல் கவுன்சிலின்படி, இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலால் 1200 பேர் கொல்லப்பட்ட நிலையில் அவர்களுள் 38 பேர் சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். பிணைக் கைதிகளாக கைது செய்யப்பட்ட 251 பேரில் 42 பேர் சிறுவர்கள் ஆவர்.
ஹமாஸ் தரப்பினர் கைப்பற்றியுள்ள காசாவின் சுகாதார அமைச்சின் தகவல்களின் படி, இஸ்ரேல் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் ஏனைய தாக்குதல்களினால் 36,731 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இதில் 14,500 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாதக் குழுக்களின் பட்டியலில் சூடான் இராணுவமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ரஷ்ய இராணுவம், கொங்கோ, மியன்மார், சோமாலியா மற்றும் நைஜீரியா போன்றவையும் இந்தக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.