யாழில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட சஜித்!

0
139

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாகதீபம் மற்றும் நயினாதீவு ஆலயங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் பாடசாலை பஸ் வழங்கி வைக்கும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக யாழிற்கு சஜித் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இன்றையதினம் (11) வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீப ரஜமகா விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், விஹாராதிபதி அதி வண. நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கும் சென்று விசேட வழிபாடுகளை மேற்கொண்டார்.

ஆலயத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவரை, ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் குருபரன் மதன்ராஜ், ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர் ஆகியோர் வரவேற்று, பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். ஆலய பிரதம குரு தலைமையில் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொண்டார்.