இலங்கையில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
167

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் 5 மரணங்களும், மாத்தறை பிரதேசத்தில் 4 மரணங்களும், அவிசாவளை பிரதேசத்தில் 3 மரணங்களும் பதிவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற, தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.