இன்று பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை – மக்களுக்கு அறிவுறுத்தல்!

0
84

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை இன்று (03) மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி இலங்கையின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சபரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில், மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடற் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.