ரஷ்யா – உக்ரைன் போரில் இலங்கைப் படையினர்: இரட்டை நிலைப்பாடு கொண்ட சக்திவாய்ந்த நாடு

0
70

ரஷ்யா-உக்ரைன் போரில் இலங்கையர்கள் போராடும் விவகாரத்தில் ஒரு “சக்திவாய்ந்த நாடு” இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.

“குறித்த மேற்குலக நாடு” ரஷ்யாவில் உள்ள இலங்கையர்களைப் பற்றிய கவலைகளை மட்டுமே எழுப்புகிறது என்று இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ட்ஜகார்யன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், உக்ரேனுக்காக போராடும் இலங்கையர்கள் குறித்து பெயரிடாத சக்திவாய்ந்த நாடு மௌனமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளது. இது அந்த நாட்டின் இரட்டை நிலை மற்றும் பாசாங்குத்தனத்தை காட்டுகிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், ரஷ்யாவுக்காக போராடி வரும் நூற்றுக்கணக்கான முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் உக்ரேனில் உள்ள சுமார் 12 போர் கைதிகளை விடுவிக்க முயற்சிப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

போர் தொடங்கியது முதல் தற்போது வரை பல்லாயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, “10 முதல் 12 இலங்கை போர்க் கைதிகளை” விடுதலை செய்ய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உக்ரேனிய பிரதமருடன் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனில் ரஷ்யப் படையினருடன் போரிட்டதில் குறைந்தது 16 இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரஷ்ய கூலிப்படை நிறுவனங்களுக்கு சட்டவிரோதமான முறையில் ஆட்சேர்ப்பு முகவர்களாக செயற்பட்டதற்காக ஓய்வு பெற்ற இரண்டு ஜெனரல்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.