தொடருந்துப் பாதைக்கு அருகிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

0
46

கம்பஹா – மீரிகம பகுதியில் தொடருந்துப் பாதைக்கு அருகில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் காயம் காணப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த நபர் அன்னதானம் வழங்கும் நிகழ்வொன்றுக்கு சென்ற நிலையில், மீள வீடு திரும்பாமையினால் அவரது தந்தையினால் காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த இளைஞரின் சடலம், அவரது வீட்டில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.