மழையுடனான காலநிலை; டெங்கு பரவல் கடும் தீவிரம்

0
96

நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ளது.இதனால்,பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47.2வீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 13 முதல் 19 வரையான காலப்பகுதியில் இவ்வருடம் ஆரம்பமான 20 ஆவது வாரத்தில் 770 டெங்கு நோயாளரும், 19 ஆவது வாரத்தில் 523 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19ஆவது வாரத்துடன் ஒப்பிடுகையில் 20ஆவது வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது.19 ஆவது வாரத்தில் 08 ஆக இருந்த டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 20 ஆவது வாரத்தில் 09 ஆக அதிகரித்துள்ளது.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,481 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆகவும் உள்ளது.மொத்த டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவ ர்களில் 36 வீதமானோர் மேல் மாகாணத்திலும், 18.1 வட மாகாணத்திலும், 8.9 மத்திய மாகாணத்திலும், 7.3 தென் மாகாணத்திலும், 9.4 வீதமாக சப்ரகமுவ மாகாணத்திலும் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 5,244 பேர், யாழ்ப்பாணம்3,887 பேர், கம்பஹா 2,293 பேர், களுத்துறை 1,844 பேர், குருநாகல் 1,090 பேர், இரத்தினபுரி 1,272 பேர், காலி 1,156 பேர், கேகாலை 1,037 பேர்,புத்தளம் 692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் இருந்தால், டெங்கு என சந்தேகிக்கப்பட்டு தகுதியான மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். நுளம்புகள் உற்பத்தியாகாத வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.