நடுவானில் குலுங்கிய விமானம் – 12 பேர் காயம்!

0
65

Qatar Airways விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று நடுவானில் திடீரென குலுங்கியுள்ளது.

கியூ.ஆர். 017 என்ற விமானம் Qatar – Doha நகரில் இருந்து நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் டப்ளின் நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

குறித்த விமானம் துருக்கி நாட்டிற்கு மேலே சென்றபோது, நடுவானில் திடீரென குலுங்கியுள்ளது.

இதனால் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.