நாடாளுமன்றம் இன்று (22) கூடவுள்ளதாக நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய இன்று முற்பகல் 9.30 அளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன் மே மாதம் 14ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ‘பொருளாதார நிலைமாற்றம்’ மற்றும் ‘பகிரங்க நிதிசார் முகாமைத்துவம்’ ஆகிய 2 சட்டமூலங்களும் முதலாவது வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
அத்துடன் எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்படும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கும் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.