இந்தியாவில் விபத்தில் சிக்கி 15 பழங்குடி மக்கள் பலி

0
75

இந்தியாவின் – சத்தீஸ்கரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15க்கும் மேற்பட்ட பைகா பழங்குடியினர் உயிரிழந்துள்ளனர்.

பீடி சுற்றுவதற்காக பயன்படுத்தப்படும் டெண்டு இலைகளை பறித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பழங்குடியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் மேலும் 25பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சாலை விபத்து

பழங்குடியினர் அனைவரும் காட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அவர்கள் பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாகவும், விபத்துக்குள்ளானபோதே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுகிறது.

சம்பவத்தை அடுத்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதியும் இந்த பிரதேசத்தில் இடம்பெற்ற சாலை விபத்து ஒன்றில் 13 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.