ஆஸ்திரேலியாவில் வாக்கிங் சென்ற பெண் அமைச்சரை கடத்தி மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள எப்பூன் தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட 37 வயது பெண்மணி பிரிட்டானி லாவ்கா. இவர் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சுகாதாரத்துறை துணை அமைச்சராகவும் இருந்து வருகிறார்.
மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை
இந்நிலையில் இரவு நேரத்தில் தனது வீட்டின் அருகே சாலையில் பிரிட்டானி லாவ்கா வாக்கிங் சென்றுள்ளார். இதன்போது மர்ம கும்பல் ஒன்று அவருக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுகுறித்து லாவ்கா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மேலும் சில பெண்கள் லாவ்காவை தொடர்பு கொண்டு தங்களுக்கும் இதுபோன்ற வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறியதாக லாவ்காவே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன. அதேவேளை பெண் அமைச்சரே மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.