லண்டன் மேயராக தொடர்ந்தும் மூன்றாவது முறையாக சாதிக் கான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளரான சூசன் ஹால்லை எதிர்த்துப் போட்டியிட்ட கான் 43.8 வீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
பிரித்தானியாவில் தற்போது உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி முன்னிலைப்பெற்றுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் பொது தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், ஆளும் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. வெளியாகியுள்ள உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் படி, கணிசமான இடங்களில் தொழிற்கட்சி வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 14 ஆண்டு கால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சிக்கு தொழிற்கட்சி முற்றுப்புள்ளி வைக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் வெற்றியை தொடர்ந்து உரையாற்றிய சாதிக் கான், “தன்னை வெற்றிபெற வைத்த மக்களுக்கு ஆத்மார்த்த நன்றிகளை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.