தனது சகோதரியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சந்தேகத்தின் பேரில் 23 வயது வளர்ப்பு மகன் ஒருவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரை நேற்று வெள்ளிக்கிழமை (19) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் சந்தேக நபரை எதிர் வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (18) சகோதரி மூலம் கிடைக்க பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்தே சந்தேக நபரை மஸ்கெலியா குற்ற தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.